மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது


மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது
x

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தலைநகர் லக்னோவில் பந்தாரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து தனிப்படை போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. சுபம் யாதவ் என்ற விண்ணப்பதாரருக்கு பதிலாக மணீஷ் குமார் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தேர்வு மையத்தை தனிப்படை போலீசார் முற்றுகையிட்டனர்.

தேர்வு எழுதிய மணீஷ் குமாரை கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம் கைமுரை சேர்ந்தவர். உண்மையான விண்ணப்பதாரரான சுபம் யாதவும் பீகாரை சேர்ந்தவர் ஆவார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

2 போலி அடையாள அட்டைகள், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஏராளமான ஹால் டிக்கெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம்வரை பெற்றுக்கொண்டு, போட்டி தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வருவதாக மணீஷ் குமார் ஒப்புக்கொண்டார்.


Next Story