நீட் முதுநிலை தேர்வில் முதல் 25 இடங்களை பிடித்த மருத்துவர்களுக்கு முதன்முறையாக சுகாதாரத்துறை மந்திரியின் பாராட்டு நிகழ்ச்சி!

நீட் முதுநிலை தேர்வில் முதல் 25 இடங்களை பிடித்த மருத்துவர்களுக்கு முதன்முறையாக  சுகாதாரத்துறை மந்திரியின் பாராட்டு  நிகழ்ச்சி!
x

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் நீட் முதுநிலை தேர்வில் வெற்றிபெற்று, தரவரிசை பட்டியலில் முதல் 25 இடங்களை பிடித்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா முதன்முறையாகப் பாராட்டு விழா நடத்துகிறார்.

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் புகழ்பெற்ற மருத்துவருமாக திகழ்ந்த 'டாக்டர் பிசி ராய்' அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாளை இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று மாலை தன்னுடைய வீட்டில் விருந்து அளிக்கிறார். நீட் முதுநிலை தேர்வில் வெற்றிபெற்று, தரவரிசை பட்டியலில் முதல் 25 இடங்களை பிடித்த மொத்தம் 50 மருத்துவ மாணவர்கள் அவருடன் உரையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், (நாளை) ஜூலை 1 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் கல்லூரியில் மருத்துவர்களை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டி பேசவுள்ளார்.

நீட் முதுநிலை தேர்வை மொத்தம் 2,06,301 பேர் தேர்வெழுதினர். ஜூன் 2ம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, தேசிய மருத்துவர்கள் தினத்தில் இந்திய மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயின் கடினமான காலங்களில் மருத்துவர்களின் சேவையை பாராட்டி 130 கோடி இந்தியர்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story