பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Dec 2022 5:30 AM IST (Updated: 6 Dec 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அத்துடன், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, இன்று மாலை, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை நடத்துகிறார். எந்தெந்த பிரச்சினைகள் மீது விவாதம் நடத்துவது என்று இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

1 More update

Next Story