வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு


வாகனம் மோதியதில்  தனியார் நிறுவன ஊழியர் சாவு
x

வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

பெங்களூரு: பெங்களூரு பீனியா அருகே லக்கரேயில் வசித்து வந்தவர் ராஜண்ணா (வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் துமகூருவுக்கு ராஜண்ணா புறப்பட்டு சென்றார். பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை அருகே அரிவேசந்திரா கிராஸ் பகுதியில் வரும் போது, அதே சாலையில் வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், ராஜண்ணா மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்தகாயம் அடைந்த ராஜண்ணா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து டாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story