ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர்- ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமா்சனம்


ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர்- ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமா்சனம்
x

ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர் என ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்திக்கு சென்று உள்ளாா். அவருடன் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களும் சென்று உள்ளனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அயோத்தி சென்று இருக்கிறார். இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அயோத்தி பயணத்தை ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், " ராவணன் ஆட்சி புரிபவர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். இது கலியுகம். நாங்கள் மராட்டியத்தில் மீண்டும் ராமரின் ஆட்சியை கொண்டு வருவோம். எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஜனநாயகத்தை காக்க எல்லா இடங்களிலும் பேரணி நடக்கிறது. எல்லா கட்சிகளும் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். " என்றார்.


Next Story