பண்ட்வாலில் 16 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு


பண்ட்வாலில்  16 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வாலில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமிக்கும் கேரளாவை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

பின்னர் அது காதலாக மாறியது. இந்தநிலையில், சிறுமியை பார்ப்பதற்காக வாலிபர் விட்டலா பகுதிக்கு வந்தார். அவர் சிறுமியை பண்ட்வால் பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு அறை எடுத்து 2 பேரும் தங்கினர். அப்போது ஆசைவார்த்தை கூறி சிறுமியை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என வாலிபர் சிறுமியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டுள்ளனர்.

அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story