திருட்டு வழக்கில் தொழிலாளி 2 பேருக்கு 2 மாதம் சிறை


திருட்டு வழக்கில்  தொழிலாளி 2 பேருக்கு 2 மாதம் சிறை
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

திருட்டு வழக்கில் தொழிலாளி 2 பேருக்கு 2 மாதம் சிறை விதித்து உடு்ப்பி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

உடுப்பி-

உடுப்பி மாவட்டம் படுபித்ரி அருகே அதமூர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனராவ். இவரது வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மர்ம நபர்கள் புகுந்து தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஜனார்த்தனராவ் படுபித்ரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து படுபித்ரி பகுதியை சேர்ந்த அப்துல் காதர், அஜிஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 2 ேபரும் அப்பகுதியில் கூலித் வேலை பார்த்து வந்ததும், இரவு நேரங்களில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி யோகேஷ் தீர்ப்பு கூறினார்.

அதில், வீட்டில் நகை, பணத்தை திருடியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அப்துல்காதர், அஜிஜ் ஆகிய 2 பேருக்கு 2 மாதம் சிறை தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.




Next Story