குலாம் நபி ஆசாத் "ஜனநாயக ஆசாத் கட்சி"என்ற புதிய கட்சியை தொடங்கினார்
"ஜனநாயக ஆசாத் கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார் முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
புதுடெல்லி
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார். தனதுகட்சிக்கு ஜனநாயக ஆசாத் கட்சி என பெயர் சூட்டி உள்ளார். கட்சியில் சேர வயது வரம்பு இல்லை. இளைஞர்களும் மூத்தவர்களும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கூறினார்.
இது குறித்து குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-
புதிய கட்சிக்காக 1,500 பெயர்கள் உருது மற்றும் சமஸ்கிருதத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்தியும் உருதுவும் கலந்து 'இந்துஸ்தானி'. இந்த பெயர் ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
"கட்சியை பதிவு செய்வதே எங்கள் முன்னுரிமை. ஆனால் (ஜம்மு மற்றும் காஷ்மீரில்) தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அது தொடர்பான ஏற்பாடுகள் விரைவில் தொடரும் என கூறினார்.