மின்சார வாகனங்களை பயன்படுத்த ராணுவம் திட்டம்
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி,
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கு வரிசலுகை போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையியில், ராணுவத்திலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் தொலைதூர பகுதிகள், பணி சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு படிப்படியாக மின்சார வாகனங்கள் ராணுவத்தில் இணைக்கப்படும். இதன்மூலம் 25% இலகுரக வாகனங்கள், 38% பேருந்துகள் மற்றும் 48% மோட்டார் சைக்கிள்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். இவற்றுக்காக, வாகன நிறுத் துமிடங்கள், குடியிருப்பு வளாகங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story