கடபா தாலுகாவில் நகைக்கடை அதிபர் மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை


கடபா தாலுகாவில்  நகைக்கடை அதிபர் மர்மசாவு  கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 6:46 PM GMT)

கடபா தாலுகாவில் நகைக்கடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

கடபா தாலுகாவில் நகைக்கடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைக்கடை திறப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கொடிம்பாலா அருகே உள்ள வித்யா நகரை சேர்ந்தவர் நாகபிரசாத் (வயது32). இவர் மரதாலாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். நாகபிரசாத் புதிய நகைக்கடை வைக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர்.

அதன்படி மரதலா மசூதி வளாகத்தில் புதிய நகைக்கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கடை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுப்பதற்கு இச்சலாம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பவில்லை.

பிரேத பிரிசோதனை

நாகபிரசாத்தை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்- ஆப் என வந்தது. இதனால் பதறிப்போன பெற்றோர், நண்பர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் நாகபிரசாத் கிடைக்கவில்லை. இந்தநிலையில் பெற்றோர் கடபா போலீஸ் நிலையத்தில் நாகபிரசாத்தை காணவில்லை என புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், கெம்புஹோளே சாலையோரம் நாகபிரசாத் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்து நடத்திய விசாரணையில், நாகபிரசாத் கடபாவில் இருந்து 2 ஹெல்மெட்டுகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நகைக்கடை திறப்பு அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார். அவர் எதற்காக இச்சலாம்பாடியில் இருந்து சக்லேஷ்புரா நோக்கி சென்றார் என்பது தெரியவில்லை. அவருடன் சென்ற நபர் யார் என்பது தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீார் ஆய்வு செய்தனர். மேலும், அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை சாலையோரம் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது அவர் விபத்தில் இறந்தாரா? என்பதும் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story