வன்முறையாளர்கள் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு: கர்நாடகத்திலும் 'உ.பி. மாடல்' ஆட்சி - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


வன்முறையாளர்கள் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு: கர்நாடகத்திலும் உ.பி. மாடல் ஆட்சி - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் தேவைப்பட்டால் “உ.பி. மாடல்” ஆட்சி நிர்வாகம் பின்பற்றப்படும் என்றும், வன்முறையாளர்கள் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பேட்டி

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைெபற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக பசவராஜ் ெபாம்மை பதவி ஏற்று ஓராண்டு ஆகிறது.

இந்த நிைலயில் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று தனது ஓராண்டு கால ஆட்சி குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சரியாக இருக்காது

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 2 ஆண்டுகள் எடியூரப்பா ஆட்சி செய்தார். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (நேற்று) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி சாதனை விளக்க மாநாடு இன்று (நேற்று) தொட்டபள்ளாபுராவில் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கட்சி தொண்டர்கள் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மாநாடு நடத்துவது சரியாக இருக்காது என்று கருதி அதை ரத்து செய்து செய்துள்ளோம்.

ஆனால் ஓராண்டு சாதனை குறித்து மக்களுக்கு விவரங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்துகிறேன். நான் பதவிக்கு வந்த பிறகு விவசாயிகளின் குழந்தைகளுக்காக கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தினேன். இவ்வாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எனது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.

உ.பி. மாடல் ஆட்சி

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சரியான முதல்-மந்திரி. அங்கு வன்முறையை ஒடுக்க அவர் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தேவைப்பட்டால் கர்நாடகத்திலும் "உ.பி. மாடல்" ஆட்சி நடத்துவோம். வன்முறைக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுப்போம். கர்நாடகத்தில் கலவரங்கள், கொலையை தடுக்க தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். தேவைப்பட்டால் கர்நாடகத்திலும் யோகி ஆதித்யநாத் மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிரவீன்கொலை வழக்கில்தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பியுள்ளோம்.

சிவமொக்காவில் ஹர்ஷா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், கொலையாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டு தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் சமரசத்திற்கு இடமில்லை. மதவாத சக்திகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் சமூக விரோதிகளுக்கு எதிராக நாங்கள் போர் தொடங்கியுள்ளோம். இதனால் கிடைக்கும் பலன் என்ன என்பது மக்களுக்கு தெரியவரும். அதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

மத பிரச்சினைகள்

சமூக நல்லிணக்கத்தை காக்க அரசுக்கு சில சவால்கள் உள்ளன. இத்தகைய சவால்கள் அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்தில் தேச விரோத சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் (என்.ஐ.ஏ.) உதவியுடன் நாங்கள் அத்தகைய தேசவிரோத சக்திகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் "ஸீப்பர் செல்"களை சிறைக்கு அனுப்பியுள்ளோம். சமீபத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த காலத்தில் இத்தகைய கொலை நடந்தபோது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதே போல் இந்த சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். மத பிரச்சினைகளை எங்கள் அரசு சிறப்பான முறையில் கையாண்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள் மாநிலத்தின் வளர்ச்சி பாதையில் சவாலாக திகழ்கின்றன. பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை நாங்கள் கடந்த காலத்தில் தடை செய்தோம்.

தேவையான ஆவணங்கள்

ஆனால் அவற்றை கோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதனால் அந்த அமைப்புகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகளை தடை செய்வதற்கான தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டி மத்திய அரசுக்கு அனுப்புவோம். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் விரைவாக மத்திய அரசின் முடிவை நீங்கள் அறிவீர்கள். இந்த தடை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அங்கு இத்தகைய கொலை மற்றும் வன்முறையில் ஈடுபடுவோரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்படுகின்றன. அதுேபால் கர்நாடகத்திலும் ேயாகி மாதிரி ஆட்சி நடைபெறும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Next Story