கர்நாடகத்தில், ஆம்புலன்சுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த வேண்டும்


கர்நாடகத்தில், ஆம்புலன்சுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த வேண்டும்
x

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க ஆம்புலன்சுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு-

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயருகிறது. இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சுகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. அந்த சமயத்தில் முன்னால் நிற்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸ்காரர்கள் இணைந்து ஆம்புலன்சுக்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். இந்த நிலையில் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சுகளை கண்காணிக்கவும், அவை செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜி.பி.எஸ். கருவி

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஆம்புலன்சுகள் சுலபமாக செல்வதற்கு, முதலில் ஆம்புலன்ஸ் செல்லும் சாலையை கண்டறிந்து முன்னதாக போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். அதற்கு மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் ஆலம்புலன்சுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என கூறினார்.மேலும், ஆம்புலன்சுகளுக்காக தனியே ஒரு கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்சுகளை கண்காணித்து, ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் சாலையை போக்குரவத்து நெரிசலின்றி வைத்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், இதுதொடர்பான உத்தரவை அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அவர் அந்த பொதுநல மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து அவர் உத்தரவிட்டார்.


Next Story