மங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 3 பேர் கைது


மங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 6:46 PM GMT)

மங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் பகுதியில் திருட்டு, கொள்ளை,வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை மங்களூரு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கன்னூர் போருகுட்டேவை சேர்ந்த முகமது பைசல் (வயது 32), அடையாறு மசூதியை சேர்ந்த முகமது அஷ்ரப் (42), அடையாறு படவு பகுதியை சேர்ந்த முகமது அல்தாப் (26) என்று தெரியவந்தது.

இவர்களில் பைசல் மீது ஏற்கனவே பண்ட்வால் புறநகர் போலீ்ஸ் நிலையம், மங்களூரு புறநகர் போலீஸ் நிலையம், கங்கனாடி, மங்களூரு வடக்கு, பஜ்பே, பர்சி போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகியுள்ளது. முகமது அஷ்ரப் மீது மங்களூரு புறநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது அல்தாப் மீது பர்கி, பனம்பூர், மங்களூரு புறநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story