ராஜஸ்தானில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்


ராஜஸ்தானில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
x

ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.


ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அமிர்தசரஸ்-ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமையான விரைவுச் சாலைப் பகுதியையும், பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் லைனின் முதல் கட்டத்தையும், பிகானரில் இருந்து பிவாடிக்கு டிரான்ஸ்மிஷன் லைனையும், 30 படுக்கைகள் கொண்ட மாநில இஎஸ்ஐசி மருத்துவமனை ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பிகானேர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு மற்றும் 43 கிமீ நீளமுள்ள சுரு-ரதன்கர் பிரிவின் இரட்டிப்பாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பிகானேரில் உள்ள நோராங்தேசரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.


மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, பிகானீர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story