உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது


உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி உபநகர் போலீசார் எல்லைக்கு உட்பட்ட நீலிஜன் ரோட்டில் முஜமல் அகமது கான் காரை நிறுத்தி விட்டு தனது சகோதரிகளை பஸ் ஏற்றி விட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த நகைப்பை திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முஜமல் உபநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக உப்பள்ளி செட்டில்மென்ட் கங்காதர் நகரை சேர்ந்த மகாந்தேஷப்பா(வயது 22) மற்றும் 14 வயது சிறுவனை உபநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 55 கிராம் தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் அந்தப்பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story