சிவமொக்கா மாவட்டத்தில் பூமி பவுர்ணமி பூஜை விழா கொண்டாட்டம்
சிவமொக்கா மாவட்டத்தில் பூமி பவுர்ணமி பூஜை விழா கொண்டாட்டப்பட்டது.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான வயல்களில் நேற்று பூமி பவுர்ணமி பூஜை கொண்டாடினர்.
தசரா விழா முடிந்த 2-ம் நாளில் பவுர்ணமிவையொட்டி, பூமி தாய் கர்ப்பம் தரித்ததாக கருதி வாழை, தென்னை, பாக்கு மரங்களுக்கு பட்டு புடவை கட்டி அதனை அலங்கரித்து உணவு படையலிட்டு விழாவை கொண்டாடுவது வழக்கம்.
நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வயல்வெளியில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பூமி தாய்க்கு படையலிட்டு பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story