மைனா் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


மைனா் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உடுப்பி;

மைனர் பெண் பலாத்காரம்

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பகுதியில் மைனர் பெண் ஒருவள் தனது தாயுடன் வசித்து வந்தாள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வேலை செய்து வந்தனர். இதேபோல் அதே பண்ணை வீட்டில் ஹாவோி பகுதியை சோ்ந்த ஹனுமந்தா (வயது 55) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த சந்தர்ப்பத்தில் சிறுமியை, ஹனுமந்தா வலுகட்டாயமாக இழத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து தாயிடம் கூறினால் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் பயந்து போன மைனர் பெண், இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதைகேட்டு மைனர்பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.


20 ஆண்டுகள் சிறை

இதையடுத்து மைனர்பெண்ணின் தாய், இதுகுறித்து குந்தாப்புரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஹனுமந்தாவை கைது செய்தனர். மேலும் கைதான அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை உடுப்பி மாவட்ட விரைவு கோா்ட்டில் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் வழக்ைக விசாரணை நடத்திய நீதிபதி சீனிவாஸ் தீர்ப்பு கூறினார். அதில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் ஹனுமாந்தாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.


Next Story