உடுப்பியில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
உடுப்பியில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் கார்கலா டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பிரசாந்த்(வயது 49). இவர் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிரசாந்த் கடந்த பல வருடங்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் எடையும் கூடியது. இதனால் அவரது உடல்நிலை மோசமானது.
அதையடுத்து அவர் 6 மாத விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை சரியாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்து வாழ்ந்து வந்த பிரசாந்த் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கார்கலா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.