உப்பள்ளியில், முன்விரோதத்தில் உருட்டு கட்டையால் தாக்கி வாலிபரை கொல்ல முயற்சி


உப்பள்ளியில், முன்விரோதத்தில் உருட்டு கட்டையால் தாக்கி வாலிபரை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:48 PM GMT)

உப்பள்ளியில், முன்விரோதத்தில் உருட்டு கட்டையால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;


முன்விரோதம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கமரிப்ேபட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் கட்டாரே (வயது 28). இவருக்கும் அதே பகுதிைய சேர்ந்த தொழிலாளியான வெங்கடேஷ் என்ற கண்டியா (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜீவ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், அவரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது.

உருட்டு கட்டையால் தாக்கி...

இந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அந்த பகுதியில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜீவ்வை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் ராஜீவ் தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ராஜீவ்வை மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த கமரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். மேலும் தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சாகில் பாக்கலா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story