சூரிய கிரகணம் எந்தெந்த இந்திய நகரங்களில் தெரியும்?
இந்தியாவில் அடுத்து 10 ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தெரியாது என்பதனால் நாளைய சூரிய கிரகணம் சிறப்பு பெறுகிறது.
புதுடெல்லி,
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந்தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் அதிக நேரம் தெரியும் மற்றும் குறைந்த நேரம் தெரியும் என்பது பற்றி தெரிய வந்துள்ளது. இதன்படி, குஜராத்தின் துவாரகா நகரில் அதிக அளவாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், ஜெய்ப்பூரில் 1 மணிநேரம் 18 நிமிடங்களும், டெல்லியில் 1 மணிநேரம் 12 நிமிடங்களும் நீடிக்கும்.
மிக குறைந்த அளவாக கொல்கத்தா நகரில் 11 நிமிடங்கள் வரை நீடிக்கும். தமிழகத்தின் சென்னையில் 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும். இந்தியாவில் அடுத்து 10 ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தெரியாது. அதனால் நாளைய சூரிய கிரகணம் சிறப்பு பெறுகிறது.
இந்தியாவின் மேற்கு நகரங்களான போர்பந்தர், காந்திநகர், மும்பை, சில்வாசா, சூரத் மற்றும் பனாஜி நகரங்களில் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக சூரிய கிரகணம் ஏற்படும். சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களில் இருந்து மக்கள் பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.