டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேற்கு வங்காளத்தில் அரசுக்கு எதிராக பா.ஜ.க. நூதன போராட்டம்


டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேற்கு வங்காளத்தில் அரசுக்கு எதிராக பா.ஜ.க. நூதன போராட்டம்
x

மேற்கு வங்காளத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பை முன்னிட்டு அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கொல்கத்தா,


உத்தர பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இவற்றில் மேற்கு வங்காளத்தில் டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.

இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் கொல்கத்தா நகரில் 500 பேருக்குக்கும் கூடுதலானோர் பாதிப்படைந்து உள்ளனர்.

எனினும், மாநிலத்தில் டெங்கு பரவல் குறைந்து வருகிறது என சமீபத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பை முன்னிட்டு அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ.க.வினர் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர். அவர்களில் சிலர் கொசு வலைகளை கொண்டு பாதுகாப்பு கவசம்போல் தங்களை மூடி கொண்டு சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பெரிய, கருப்பு நிறத்தில் கொசு போன்ற ஒரு மாதிரியை சுமந்து கொண்டு அவர்களை நோக்கி செல்வது போல் மிரட்டும் பாணியில் நடந்து சென்றார்.

இதுபற்றி பா.ஜ.க.வின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, அவைக்கு (சட்டசபைக்கு) சுகாதார மந்திரி வருவது இல்லை.

சுகாதார மற்றும் உள்துறைகளில் விவாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. அவர்கள் சட்டசபையில் எழுப்பும் கேள்விகளையும் எடுத்து கொள்வதில்லை என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.




Next Story