சுயேட்சை எம்எல்ஏ-வுக்கு பிரான்ஸில் இருந்து வந்த கொலைமிரட்டல்..!


சுயேட்சை எம்எல்ஏ-வுக்கு பிரான்ஸில் இருந்து வந்த கொலைமிரட்டல்..!
x

புதுச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏவிற்கு கடிதம் மூலம் கொலை ரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ ஆக இருப்பவர் பிரகாஷ்குமார். அவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினரை பொங்கல் பண்டிகைக்குள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ பிரகாஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story