4-வது தொழிற்புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும் பிரதமர் மோடி உறுதி


4-வது தொழிற்புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும்  பிரதமர் மோடி உறுதி
x

4-வது தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கேவடியாவில் தொழில்துறை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு பிரதமர் மோடி தனது உரையை அனுப்பி வைத்தார்.

அவரது உரையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சக இணை செயலாளர், கருத்தரங்கில் வாசித்தார்.

அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

பல்வேறு காரணங்களால், முந்தைய 3 தொழில் புரட்சிகளில் ஒரு அங்கமாக இருப்பதை இந்தியா தவற விட்டிருக்கலாம். ஆனால், 4-வது தொழில் புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும். அதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது.

மக்கள்தொகை, தேவை, உறுதியான நிர்வாகம் ஆகியவை இணைந்து நமக்கு கிடைத்துள்ளன. 4-வது தொழில் புரட்சி என்பது புதிய தொழில்நுட்பமும், புதுமையான சிந்தனையும் சம்பந்தப்பட்டது ஆகும்.

உலகளாவிய சங்கிலி தொடரில் இந்தியாவை முக்கிய பாலமாக ஆக்குவதில் தொழில்துறையும், தொழில்முனைவோரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்தியாவை உலகத்திலேயே தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி கூடமாக மாற்ற சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்கில் மத்திய கனரக தொழில்துறை மந்திரி மகேந்திரநாத் பாண்டே பேசியதாவது:-

உலகளாவிய உற்பத்தி கூடமாக மாறுவதை நோக்கி இந்தியா நடைபோட்டு வருகிறது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில், 3டி பிரிண்டிங், டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

175 மின்சார பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Related Tags :
Next Story