எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவு மேம்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் சீன தேசிய பாதுகாப்பு மந்திரியை, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். இதுபற்றி அவர் பேசும்போது, சீனாவுடனான உறவு மேம்பட இந்தியா விரும்புகிறது. எனினும், எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவானது மேம்பாடு அடையும் என கூறியுள்ளார்.

எல்லை அசல் கோட்டு பகுதியில் அனைத்து விவகாரங்களும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றின்படியே தீர்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு ஆனது, எல்லை பகுதியில் அமைதி நிலை நிறுத்தப்படும்போது மட்டுமே வளர்ச்சி அடைய முடியும்.

எல்லையில் இருந்து படைகள் வாபஸ் பெற்ற பின்பு, வன்முறைக்கான தீவிர சூழலும் குறைய வேண்டும் என்று கூறியுள்ளதுடன், நேர்மறையான பதில் கிடைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இந்த சந்திப்பில் வெளிப்படுத்தி உள்ளார்.


Next Story