இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!


இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
x

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 436-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 211 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 738 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story