இந்தியாவில் நேற்றைவிட சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு...!!


இந்தியாவில் நேற்றைவிட சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு...!!
x

கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று கொரோனா தொற்று சற்று குறைவாக பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 92 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,79,477 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,13,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,97,98,21,197 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,78,383 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,32,978 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,39,99,907 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


Next Story