இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்வு


இந்தியாவில்  கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்வு
x

இந்தியாவில் கடந்த 184-நாட்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,824- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பதிவான அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவேயாகும். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,389-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனா பாதிப்புக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,389- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 22 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது.


Next Story