இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
x

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,720 - ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

தற்போது நமது நாட்டில் ஒமைக்ரான் துணை வைரசான 'எக்ஸ்பிபி.1.16' தாக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி பாதிப்பு நேற்று 11 ஆயிரத்தையும் கடந்தது. சரியாக 11 ஆயிரத்து 109 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு உறுதியானது. 236 நாட்களில் இந்த அளவுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது இது முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 10,753 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,720 - ஆக உயர்ந்துள்ளது.


Next Story