இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று...!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று...!
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் நேற்று இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 2,323 பேருக்கு தொற்றுபாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 2,022 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 022 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,36,167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,459 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,099 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,99,102 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 14,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,92,38,45,615 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,668 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story