தினசரி கொரோனா பாதிப்பு 4,043 ஆக குறைந்தது


தினசரி கொரோனா பாதிப்பு 4,043 ஆக குறைந்தது
x

இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 043 ஆக குறைந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 4,043 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,43,089 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் குணமடைபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4,676 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48,027 லிருந்து 47,379 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,370 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 216 கோடியே 83 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.


Next Story