இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒரேநாளில் 6,298 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,22,774 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48,389 லிருந்து 46,748 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 23 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,273 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று ஒரு நாளில் 5 ஆயிரத்து 916 பேர் மீட்கப்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பினர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து 4 கோடியே 39 லட்சத்து 47ஆயிரத்து 756 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 216.17 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,61, 896 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story