பத்திரிகை சுதந்திரம் இந்தியா ஆப்கானிஸ்தானை விட மிகவும் பின்தங்கியது...!
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது, 180 நாடுகளில் 161 வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது.
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது.
தெற்காசியாவிலும் கூட,தரவரிசைபட்டியலில் மிக மோசமான சரிவை இந்தியா கண்டுள்ளது. வங்காள தேச்ம சற்று மோசமாக இருந்தாலும், 163 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை விட 150 வது இடத்தில் உள்ளது. தலிபான் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நண்பன் இல்லை என்று அறியப்படும் ஆப்கானிஸ்தானும் கூட 152 வது இடத்தில் உள்ளது. பூட்டான் 90 வது இடத்திலும், இலங்கை 135 வது இடத்திலும் உள்ளன.
பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
இந்தியா ஏன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறியதாவது:-
"பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு இவை அனைத்தும் "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில்" பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது என கூறி உள்ளது.
நாட்டின் முன்னணி மொழியான இந்தியில் நான்கு நாளிதழ்கள் நாட்டின் முக்கால்வாசி வாசகர்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மே 3ம் தேதியும் உலக நாடுகள் சபையால் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு யுனெஸ்கோ மூலம் ஆப்ரிக்க பத்திரிகையாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 2016 முதல் 2021 வரை யுனெஸ்கோ அறிக்கையின்படி 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை கடந்த 2022ல் மட்டும் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் 22 பேர்.
இந்த கணக்கு 2021ம் ஆண்டின் 55 பேர் என்பதை விட அதிகம். யுனெஸ்கோவின் இந்த அறிக்கையின்படி 4 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் பத்தில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்து நீதி கிடைப்பதாகவும் விமர்சனம் உள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு, கொலைகள், சிறைபிடிப்புகள், வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் யாராக இருந்தாலும் வழக்கு போடுவோம், மிரட்டுவோம் என்ற பாணியில் பல்வேறு தனி நபர்களும், அரசு சார், சாரா அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 2022 டிசம்பர் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 363 பத்திரிகையாளர்களும், இந்தியாவில் மட்டும் 7 பத்திரிகையாளர்களும் தனது கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் சமீபத்தில் பிணையில் வெளியே வந்த கேரளாவை சேர்ந்த சித்திக் காப்பானும் அடங்குவார். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் பலர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம், தீவிரவாத தடுப்பு சட்டம் போன்ற கொடும் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் வெளியே வராத வகையில் பிணை வாங்கினாலும் கைது செய்து வருடக்கணக்கில் சிறையில் அடைத்து விடுகின்றனர்.