'இந்திய-அமெரிக்க உறவு உலகிற்கு நன்மை பயக்கும் ' - பிரதமர் மோடி
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும் என டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தனது 3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டுக்குச் சென்றார். 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர், எகிப்து நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தநிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்க, எகிப்து நாடுகளுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி நள்ளிரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். நாடு திரும்பிய பிரதமர் மோடியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட எம்.பி.,க்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும். அமெரிக்காவில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story