உத்தரகாண்ட்டில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தியா - அமெரிக்கா இணைந்து மெகா ராணுவ பயிற்சியை நடத்த திட்டம்!


உத்தரகாண்ட்டில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தியா - அமெரிக்கா இணைந்து மெகா ராணுவ பயிற்சியை நடத்த திட்டம்!
x

இந்தியாவும் அமெரிக்காவும் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் மெகா ராணுவ பயிற்சியை நடத்த உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவும் அமெரிக்காவும் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் வரும் அக்டோபர் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஆலியில் இரண்டு வார கால மெகா ராணுவ பயிற்சியை நடத்த உள்ளன.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான இந்தியாவின் நீடித்த எல்லை பிரச்சினைக்கு மத்தியில், "யுத் அபியாஸ்" என்ற ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.

இந்த பயிற்சியானது இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்களுக்கு இடையே புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"யுத் அபியாஸ்" பயிற்சியின் 18வது பதிப்பு, அக்டோபர் 14 முதல் 31 வரை நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு, இந்தப் பயிற்சியின் பதிப்பு 2021 அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது.

முன்னதாக, அக்டோபர் 2020இல், இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் அதிகரிக்க, "பீஇசிஏ அல்லது பெக்கா" எனப்படும் 'அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்' கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் அமெரிக்காவும்


Next Story