கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு


கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு
x
தினத்தந்தி 9 Aug 2023 1:15 AM IST (Updated: 9 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

இனி வரும் மாதங்கள், பண்டிகைக்காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கி விட்டன.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுக்கு 10.8 கோடி டன் கோதுமை பயன்பாடு உள்ளது. ஆனால் உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டு எதிர்பார்ப்பைவிட அறுவடையில் 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதனால் கோதுமை வரத்து சந்தைகளில் குறையத்தொடங்கியுள்ளது. இனி வரும் மாதங்கள், பண்டிகைக்காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கி விட்டன.இதனால் சந்தையில் கோதுமை விலை எகிறத்தொடங்கி இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்து இருக்கிறது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் சந்தையில் மொத்தவிலை கிலோவுக்கு ரூ.28 வரை இருந்திருக்கிறது.

இதனால் கோதுமை விலையை கட்டுப்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. விலை குறைய கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதுமை விலை உயர்வு, தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story