2027-28-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - பிரபல பொருளாதார நிபுணர் கணிப்பு


2027-28-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - பிரபல பொருளாதார நிபுணர் கணிப்பு
x

கோப்புப்படம்

2027-28-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

நாடாளுமன்றத்தில் கடந்த 31-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2023-24-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வளர்ச்சி மேலும் அதிகமாக இருக்கும் என பிரபல இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுனரும், முன்னாள் நிதி ஆயோக் துணைத்தலைவருமான அரவிந்த் பங்காரியா கூறியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியா கடந்த 2003-ம் ஆண்டு இருந்த 8 சதவீத வளர்ச்சி நிலையில் தற்போது உள்ளது. இந்த நிலையை பார்த்தால், அது 7 சதவீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி விகிதத்திற்குத் திரும்பும்' என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'இந்தியா தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது, 2027-28-ல் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும்' என தெரிவித்தார்.

அரசு மற்றும் தனியார் முதலீடுகளில் எழுச்சியை காண்பதாக கூறிய பங்காரியா, கொள்கை சீர்திருத்தங்கள், நிறைய உள்கட்டமைப்புகள் நடந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story