சுகோய்-30 போர் விமானத்தின் பயன்பாட்டை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்க இந்திய விமானப்படை முடிவு


சுகோய்-30 போர் விமானத்தின் பயன்பாட்டை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்க இந்திய விமானப்படை முடிவு
x

போர் விமானங்களில் நவீன ரேடார் கருவிகள், ஆயுத அமைப்புகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் அஸ்திரா எம்.கே.1, பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய, வான் வெளியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போர் விமானங்கள் ஆகும்.

ரஷிய தயாரிப்பான இந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்களின் பயன்பாட்டை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த போர் விமானங்களில் நவீன ரேடார் கருவிகள், ஆயுத அமைப்புகள் உள்ளிட்டவற்றை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'விருபாக்ஷா' ரேடார் கருவிகள் உள்ளிட்டவை இந்த போர் விமானங்களில் இணைக்கப்பட உள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story