இந்திய விமானப்படையின் 'சீட்டா' திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு!


இந்திய விமானப்படையின் சீட்டா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு!
x

பாதுகாப்புத்துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலின் நவீன ஆளில்லா விமானங்களை(டிரோன்கள்) இந்திய ராணுவ முப்படைகளுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையின் புதிய அறிமுகமான சீட்டா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாதுகாப்புத்துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலின் நவீன ஆளில்லா விமானங்களை(டிரோன்கள்) தயாரித்து இந்திய ராணுவ முப்படைகளுக்கு ஆயுதமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவின் ஹெரான் டிரோன்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட திறன் கொண்ட பிற கண்காணிப்பு ஆயுதங்களை பொருத்தும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீட்டா திட்டம் வழங்கப்படும்.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹெரான் ஆளில்லா டிரோன்கள் நடுத்தர உயரத்தில் இருக்கும் ஆளில்லா விமானம் ஆகும். அவை 250 கிலோ எடையை சுமந்து செல்லும். அவற்றில் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் பல கருவிகளை பொருத்த முடியும். கண்காணிப்பு பணியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹெரான் ஆளில்லா விமானத்தின் தகவல் தொடர்பு தொலைந்தால், தன்னிச்சையாக அவை தளத்திற்குத் திரும்பும் திறன் கொண்டவை.இந்திய விமானப்படை, இந்திய இராணுவம் மற்றும் இந்திய கடற்படை ஆகிய முப்படை சேவைகளில் பயன்படுத்தப்படும் ஹெரான் டிரோன்கள் மேம்படுத்தப்படும். அவை லேசர் வழிகாட்டும் குண்டுகளுடன் ஆயுதம் ஏந்துவதற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படும்.


Next Story