'பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றி
அரபிக்கடலில் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது.
புதுடெல்லி,
இந்திய-ரஷிய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து செலுத்தத்தக்க 'பிரமோஸ்' சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இது, ஒலியின் வேகத்தைப்போல் 3 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது.
இந்த ஏவுகணைகளில், கப்பலில் இருந்து ஏவக்கூடிய 'பிரமோஸ்' ஏவுகணையை நேற்று இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர், ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டது.
அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அது இலக்கை துல்லியமாக தாக்கியது.
Related Tags :
Next Story