புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை


புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த மாதம் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது. நிப்டி 1000 புள்ளிகள், பேங்க் நிப்டி 2 ஆயிரம் சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள், பேங்க் நிப்டி 5 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து மீளத்தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமுதலே இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் உள்ளது.

அதன்படி, நிப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 307 என்ற புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், பேங்க் நிப்டி சுமார் 1000 புள்ளிகள் அதிகரித்து 53 ஆயிரத்து 256 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரத்து 74 என்ற புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story