நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் வேளாண், உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு..!


நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் வேளாண், உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு..!
x

ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13771 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு (ஏப்ரல் - செப்டம்பர்) வரை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை ஒப்பிடுகையில், 25 சதவீதம் அதிகரித்துள்ளது. வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13771 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11056 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 42.42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி 29.36 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.பருப்பு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 144 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாசுமதி அரிசி ஏற்றுமதி கடந்த ஆறு மாதங்களில் 37.36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இறைச்சி, பால் மற்றும் கோழிப் பண்ணைப் பொருட்களின் ஏற்றுமதி 10.29 சதவீதமும், மற்ற தானியங்களின் ஏற்றுமதி 12.29 சதவீதமும் அதிகரிதுள்ளது.

பால் பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. கோதுமை ஏற்றுமதி 136 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் (ஏபிஇடிஏ) தலைவர் எம் அங்கமுத்து கூறுகையில், "தரமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை உறுதிசெய்ய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பதப்படுத்தும் உணவுத் தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த வளர்ச்சியை நிலை நிறுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்" என்றார்.


Next Story