2022-2023-ம் நிதியாண்டில் இதுவரை நேரடி வரிவசூல் ரூ.15.67 லட்சம் கோடி


2022-2023-ம் நிதியாண்டில் இதுவரை நேரடி வரிவசூல் ரூ.15.67 லட்சம் கோடி
x

இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் நிகரத்தொகையைவிட 18.40 சதவீதம் அதிகம்.

புதுடெல்லி,

நாட்டில் 2022-2023-ம் நிதியாண்டில் நேற்று முன்தினம் வரை வசூலான நேரடி வரி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்வதாக அது தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வரையிலான நேரடி மொத்த வரிவசூல் ரூ.15.67 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலைவிட 24.09 சதவீதம் அதிகம். நேரடி வரி வசூலில் திருப்பிச் செலுத்தவேண்டிய நிகரத்தொகை ரூ.12.98 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் நிகரத்தொகையைவிட 18.40 சதவீதம் அதிகம். திரும்பச் செலுத்தும் தொகையில் ரூ.2.69 லட்சம் கோடி நேற்று முன்தினம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு திருப்பிச் செலுத்தியதைவிட 61.58 சதவீதம் அதிகமாகும்.


Next Story