தேசநலன்,கொள்கைகள் குறித்து பேசலாம், பிரதமர் மோடி குறித்து கவுதம் அதானி ஓபன் டாக்


தேசநலன்,கொள்கைகள் குறித்து பேசலாம், பிரதமர் மோடி குறித்து கவுதம் அதானி ஓபன் டாக்
x

தேசநலனை கருத்தில் கொண்டு, கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசலாம் என பிரதமர் மோடி குறித்து கவுதம் அதானி கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த சில ஆண்டுகளாகவே கவுதம் அதானி தனது தொழில்களைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஒருவராகவும் இந்தியாவில் டாப் கோடீஸ்வரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

இத்தகைய சூழலில் பாஜகவுக்கு அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் இந்த அளவு வளர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கவுதம் அதானி தனது பேட்டி ஒன்றில் விளக்கி உள்ளார். அதில்,

பிரதமர் மோடியிடம் இருந்து யாராலும் எந்தவொரு தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தேசிய நலனுக்கான கொள்கைகளைப் பற்றி நீங்கள் அவரிடம் பேசலாம், ஆனால் ஒரு கொள்கை வகுக்கும் போது, அது அதானி குழுமத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்.

நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இன்று 22 மாநிலங்களில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நரேந்திர மோடி அரசு குறிப்பிட்ட முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதிலும், பாஜக அரசை அம்பானி- அதானி அரசு என்றும் காங்கிரஸ் விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவது இயல்பு தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

30 ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பின்னரே நாங்கள் இந்த நிலையை அடைந்துள்ளோம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஏற்றுமதி- இறக்குமதி கொள்கையை முதன்முதலில் தாராளமயமாக்கியனர். இது எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது இப்போது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்" என்றார்.


Next Story