தமிழகத்தின் 3 பகுதிகள் உட்பட ராம்சார் பட்டியலில் இணைந்த 5 இந்திய பகுதிகள்


தமிழகத்தின் 3 பகுதிகள் உட்பட ராம்சார் பட்டியலில் இணைந்த 5 இந்திய பகுதிகள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 July 2022 6:31 PM IST (Updated: 26 July 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சார் எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் "ராம்சார் ஒப்பந்தம்" கையெழுத்தானது. இந்த ராம்சார் பட்டியலின் நோக்கம் முக்கியமான சதுப்பு நிலங்களை பராமரிப்பதாகும். ராம்சார் பட்டியலில் இணைவதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக கருதப்படுகிறது.

இது உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கிய அரணாக விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் 5 இந்திய பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மூன்று பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை காப்பு காடு மற்றும் பிச்சாவரம் சதுப்புநில காடு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

இதை தவிர மத்திய பிரதேசத்தில் உள்ள சாக்யா சாகர் மற்றும் மிசோரமில் உள்ள பாலா சதுப்பு நிலம் ராம்சார் உடன் படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. "ஐந்து இந்திய சதுப்பு நிலங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.


Next Story