நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்வு


நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்வு
x

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் கிராம பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதியில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது. நகரப் பகுதியில் 8.96 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 7.55 சதவீதமாகவும் இது உள்ளது. கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் நகரப் பகுதியில் 7.21 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 8.04 சதவீதமாகவும் இருந்துள்ளது.

கடந்த நவம்பரில் ஹரியாணாவில் மட்டும் இந்த விகிதம் 30.6 சதவீதமாக இருந்துள்ளது. ராஜஸ்தானில் 24.5 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 23.9 சதவீதம், பிஹாரில் 17.3 சதவீதம், திரிபுராவில் 14.5 சதவீதம் என இருந்துள்ளது.

இந்த விகிதம் சத்தீஸ்கரில் 0.1 சதவீதம், உத்தராகண்ட் 1.2 சதவீதம், ஓடிசாவில் 1.6 சதவீதம், கர்நாடகாவில் 1.8 சதவீதம், மேகாலாயா 2.1 சதவீதம் என்ற எண்ணிக்கையில் குறைவாக இருந்துள்ளது. இந்திய அளவில் கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் 7.77 சதவீதமாகவும், செப்டம்பரில் 6.43 சதவீதமாகவும் இருந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story