ஐதராபாத்தில் இருந்து தினமும் 150 விமானங்களை இயங்கி இன்டிகோ நிறுவனம் சாதனை
ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ விமான நிறுவனம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இதுப்பற்றி அவர் கூறுகையில் "இண்டிகோ இப்போது ஐதராபாத்தில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.்" என்றார்.
இன்டிகோ விமான நிறுவனம் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கும், வெளிநாடுகளில் 8 நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story