இந்திய-அமெரிக்க ராணுவ சிறப்பு படைகள் கூட்டுப்பயிற்சி நிறைவு


இந்திய-அமெரிக்க ராணுவ சிறப்பு படைகள் கூட்டுப்பயிற்சி நிறைவு
x

இமாசலபிரதேசத்தில் நடந்து வந்த இந்திய-அமெரிக்க ராணுவ சிறப்பு படைகள் கூட்டுப்பயிற்சி நிறைவுபெற்றது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவத்தின் சிறப்பு படைகள் ஆண்டு தோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இரு நாட்டு ராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய-அமெரிக்க ராணுவ சிறப்பு படைகளின் கூட்டுப்பயிற்சி இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது.

2 கட்டங்களாக நடைபெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் இரு தரப்பினரும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர். 3 வாரமாக நடந்து வந்து கூட்டு போர்ப்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது.


Next Story