சாதி பெயரை கூறி அவமானப்படுத்திய 4 பேர் மீது போலீசில் புகார்
உடுப்பியில் சாதி பெயரை கூறி அவமானப்படுத்திய 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு;
உடுப்பியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் பிரசாந்த். இவர் தலித் சமூகத்ைத சேர்ந்தவா் ஆவாா். இந்த நிலையில் அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் மீண்டும் அலுவலத்திற்கு வந்துள்ளாா். அப்போது அந்த அலுவலத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களான அஸ்வினி, மஞ்சுளா மற்றும் ஸ்ரீநிவாஸ் ஷெட்டி ஆகியோர் அவரை சாதி பெயரை சொல்லி தரக்குறைவாக தீட்டி அவமானப்படுத்தி உள்ளனா்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரசாந்த் உடனே நடந்த சம்பவம் குறித்து உடுப்பி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story