தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் அரசின் சட்டப்படியான நடைமுறைகளை சித்தராமையா எதிா்ப்பது சரியா?-மந்திரி பி.சி.நாகேஸ்


தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில்  அரசின் சட்டப்படியான நடைமுறைகளை சித்தராமையா எதிா்ப்பது சரியா?-மந்திரி பி.சி.நாகேஸ்
x

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் அரசின் சட்டப்படியான நடைமுறைகளை சித்தராமையா எதிா்ப்பது சரியா? என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் அரசின் சட்டப்படியான நடைமுறைகளை சித்தராமையா எதிா்ப்பது சரியா? என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் பள்ளி

கர்நாடகத்தில் புதிதாக தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறக்க எந்த விதமான விதிறைகளையும் வகுக்காமல் சட்டவிரோதமாக பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முறைகேடுகளுக்கு துணை போனதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராயைாவின் பங்கு என்ன?. வெளிப்படைத்தன்மை, நேர்மை, பாதுகாப்பு, கல்விக்கு ஏற்ற சூழலை உருவாக்க பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது.

ஆனால் கிரிமினல் வழக்குகள் உள்ள ஒருவர் மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் சித்தராமையாவுக்கு என்னை குறை சொல்ல தகுதி இல்லை. கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் சுப்ரீம் கோர்ட்டு, புதிதாக பள்ளிகளை திறப்பது குறித்து சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

திறக்க அனுமதி

அதன்படியே நாங்கள் புதிய பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவதற்கு முன்பு அந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டு்ளளதா? என்று ஆய்வு செய்கிறோம். ஆனால் சித்தராமையா எதிர்க்கிறார். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் சித்தராமையாவுக்கு அக்கறை இல்லையா?.

புதிய பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கான அனுமதியை விஸ்தரிப்பது போன்ற பணிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறுகின்றன. அரசின் சட்டப்படி நடைபெறும் இந்த நடைமுறையை சித்தராமையா எதிர்ப்பது சரியா?.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story