இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறுவதா?- பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம்


இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறுவதா?-  பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம்
x

இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறியதற்கு பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா பிரிவினையின் தாத்தா நேரு என்று பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்தது. இந்தியாவின் ஒற்றுமை ஒரு கட்சியால் சாத்தியமா?. பாரத் ஜோடோ இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் யாத்திரை என்றும் பா.ஜனதா விமர்சனம் செய்தது. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது. காங்கிரஸ் விளம்பரம் மற்றும் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா கூறும்போது, வலதுசாரி சித்தாந்தம் எப்போதும் வரலாற்றின் தவறான பக்கத்தில் இருந்து வருகிறது. அவர்களால் (பா.ஜனதா) வரலாற்றை மாற்றி எழுத முடியாது. வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்கின்றனர்.

சாவர்க்கர் தலைமையில் 1937-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த மாநாட்டில் இருதேச கோட்பாடு முன்வைக்கப்பட்டது. 1942-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அனைத்து மாகாண அரசுகளையும் விட்டு வெளியேறி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றது. அப்போது அவர்கள் (பா.ஜனதா) முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருந்தனர். பாகிஸ்தானை பிரித்தவர்களிடம் பா.ஜனதாவினர் பேசுகின்றனர். பா.ஜனதாவினருக்கு வரலாறு தெரியாது. அவர்கள் நேருவை இந்திய பிரிவினையின் தாத்தா என்று விமர்சிப்பதா?.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்? எந்த போராட்டத்தில் உயிரை விட்டார்கள்?. அவர்களும், பா.ஜனதாவினரும் காங்கிரசுக்கு வரலாறு பற்றி பாடம் எடுக்கிறார்கள். இது சரியா? என்றார்.


Next Story